Annai Sri Sarada Devi - Virivana Vazhkai Varalaru (Tamil)
₹ 175.00
Tags:
இந்த நூல் பக்தையாகவும், கர்ம வீராங்கனையாகவும், யோகினியாகவும், ஞானியாகவும் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வரலாறு. அது மட்டுமல்ல; அவருக்குத் திருமணம் நடந்தது, கணவருக்கு ஏற்ற மனைவியாக அவர் வாழ்ந்தார், ஆனால் கன்னியாக இருந்தார். கன்னியாக இருந்தார், ஆனால் ஆயிரக்கணக்கானோர் ‘அம்மா அம்மா’ என்று அழைக்கின்ற தாயாக வாழ்ந்தார். அசாதாரணமானதொரு குடும்பச் சூழ்நிலையில் வாழ்ந்தார், ஆனால் துறவி வேந்தர்களை உருவாக்குகின்ற துறவின் இருப்பிடமாகத் திகழ்ந்தார். இவ்வாறு முரணான அனைத்தையும் கோத்து நின்றது அவரது தாய்மைப் பேருணர்வு. அவரது பெருவாழ்வின் மூலம் பெண்மை புனிதம் பெற்றது, மனைவி என்ற நிலை மதிப்புப் பெற்றது, தாய்மை தனியிடம் பெற்றது. ஆம். அன்னை ஸ்ரீசாரதா தேவியின் வாழ்வு ஓர் அற்புதம்.
அன்னை ஸ்ரீசாரதாதேவியின் வாழ்க்கை ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல; காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அதாவது, இன்றைய பெண்களுக்கு ஒரு லட்சியப் பெண்ணாகத் தோன்றியவர் அவர். அத்துடன், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் சக்தியான அன்னை எவ்வாறு அவரது அவதாரப் பணியில் துணைநின்றார் என்பதும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
பக்தர்கள் எல்லோரும் இந்த நூலைப் பெற்று உன்னத பக்தியைப் பெற வேண்டும்!

Delivery
Product Details
If you want to purify your mind, think of Mother Sri Sarada Devi's life of Supreme purity and of her glory. There is no greater way than this. Sri T.M.P Mahadevan one of the present day thinker of repute, what greater heights a woman's life can attain was exemplified in this detailed life history of the mother.