










அன்னை ஸ்ரீசாரதாதேவிக்குப் பதினோரு வருடங்கள் சேவை செய்த சுவாமி ஈஷானானந்தர், அன்னையின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை ‘மாத்ரு ஸாந்நித்யே’ என்னும் வங்காள நூலில் விளக்கியுள்ளார். அன்னையின் அளப்பற்ற அன்பையும் கருணையையும் தமிழ்கூறும் நல்லுலகம் அறிய தமிழில் வெளியிடுகிறோம்.
அன்னை பேசிய வார்த்தைகளின் இனிமையையும் சுவையையும் அழகையும், அவற்றில் பொதிந்திருக்கும் தன்னலமற்ற அன்பையும் எல்லையற்ற கருணையையும் இந்த நூலிலிருந்து அறியலாம்.