Amma (Tamil)
Tags:
பண்டிதர்-பாமரர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், பணக்காரன்-ஏழை, ஆண்-பெண் என்ற வேறுபாடின்றி அனைவரையும் தன் அன்பினால் ஆலிங்கனம் செய்து கொண்ட சாட்சாத் ஜகன்மாதாவான அன்னை ஸ்ரீசாரதா தேவியின் காரணமற்ற கருணையையும், அவரது வாழ்க்கையையும் விளக்கும் அதிசய நூல்.
தூய, தன்னலமற்ற, பிரதிபலன் எதிபார்க்காத அன்பைக் காட்ட முடியும் என்பதை ஆணித்தரமாகத் தருகிறது அன்னையின் அரிய வாழ்வு. அவரது வாழ்வே உபதேசம், அவர் நமக்கு விட்டுச் சென்ற அரிய செய்தி. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய சகல பண்புகளும் உருவாகத் திரண்டு வந்திருக்கிறார் அன்னை ஸ்ரீசாரதா தேவி. அவரது இந்த சரிதையைப் படிக்கும் போது நமக்கு அது நன்கு விளங்கும். எளிமையிலும் எளிமையாக, சாந்த ஒளியாக, அன்பின் தண்ணொளியாக வாழ்ந்து காட்டியவர் அன்னை.
‘அம்மா’ எனும் இந்நூலைப் படிக்கும்போது ஆங்காங்கே அற்புதம், அதிசயம், வியப்பு, விநோதம் கலந்த சம்பவங்களைப் படிக்க நேரிடும். அம்மாவைப்போல் அன்றும் இன்றும் என்றும் எண்ணற்றவர்களுக்கு அம்மாவாக இருந்தவர், இருப்பவர், இருக்கப் போகிறவர் எவரேனும் உண்டா என்றால் அது கேள்விக்குறியே. ஸ்ரீராமகிருஷ்ணரை ராமகிருஷ்ணராக வாழ வைத்த பெருமையும் அம்மாவைச் சார்ந்ததே.
அம்மாவின் இந்தச் சரித்திரத்தைப் படித்து மனதில் சி ந்தித்தால் சித்தத்தின் மலமெல்லாம் நீங்கிவிடும்.
Author
Ra.Ganapathy Language
Tamil Publisher
Sri Ramakrishna Math, Chennai Binding
Paperback Pages
822 ISBN
9788178835884 SKU
BK 0002351 Weight (In Kgs)
0.775 Choose Quantity
₹ 300.00
Product Details
This unique book explains the life and unreasonable grace of the universal Mother Sri Sarada Devi, who by her love and affection had embraced everyone irrespective of the differences like scholar-illiterate, upper caste-lower caste, rich-poor, men-women etc.
Mother’s distinct life tells authoritatively that pure, unconditional, unselfish love can be shown towards others. Her life itself is a sermon, which she had left as a rare message. Holy Mother Sri Sarada Devi is a complete form of all the good qualities prescribed to a woman. We can clearly understand this by reading her life history. Mother had lived her life as simple of the simplest, as a serene light and with the coolest love.
When we read this book “Amma” we come across certain miraculous and weird events. It is a question mark indeed whether anyone was, is or will be like Holy Mother who remained as a mother to innumerable people in the past, present and future. The glory of making Sri Ramakrishna live as Sri Ramakrishna belongs to the Holy Mother only.
The reading and meditation of the life history of the Holy Mother will remove all the impurities of the mind.