
Dhyanamum Anmiga Vazhkaiyum Volumes 1 - 2 (Tamil)
₹ 1,000
Product Details
தியானமும் ஆன்மீக வாழ்க்கையும்
(Meditation and Spiritual Life என்ற நூலின் தமிழாக்கம்)
(மொழியாக்கம்: சுவாமி ஸுப்ரக்ஞானந்தர்)
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வர் சுவாமி பிரம்மானந்தரின் சீடர் சுவாமி யதீஸ்வரானந்தர். அவர் ராமகிருஷ்ண இயக்கத்தின் பெருமதிப்பிற்குரிய தவமிகு துறவி. ராமகிருஷ்ண மடம் – மிஷனின் துணைத் தலைவராக விளங்கி உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற பக்தர்களுக்கு தீக்ஷை அளித்து அவர்களது ஆன்மீக வாழ்க்கையைத் துலங்கச் செய்தவர்.
ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்த சுவாமிகள் தியானம், தியானத்தின்போது வரும் தடைகள், அவற்றை விலக்கும் வழிகள், மனதின் இயல்புகள், அதனை வெற்றிகொள்ளும் வழிகள், இறைவனின் உருவ, அருவ தியானம் போன்ற பல விஷயங்களை ஆழமாக, தெளிவாக, எளிமையாக, விரிவாக இந்த நூலில் விளக்கியுள்ளார்.
மனோதத்துவத்தையும் கடவுள் தத்துவத்தையும் அனுபவ அறிவுடன் கற்ற சுவாமி யதீஸ்வரானந்தரின் இந்த நூல் ஆன்மீகச் சாதகர்களுக்கும் பக்தர்களுக்கும் ஓர் அற்புதமான வழிகாட்டி. Meditation And Spiritual Life என்ற நூலை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் சுவாமி ஸுப்ரக்ஞானந்தர் மொழியாக்கம் செய்துள்ளார்.
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1118 பக்கங்கள் கொண்ட ரூ.1000/- மதிப்புள்ள இந்த இரு நூல்களை ரூ.500/-க்கே வழங்குகிறோம்.