
Annai Sri Sarada Deviyin Thennaga Yathirai (Tamil)
₹ 45.00
Out of stock
Tags:
Delivery
Product Details
தீர்த்த யாத்திரை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் யாத்திரை ஓர் உயர்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட வேண்டும். யாத்திரையின் நோக்கம் உயர்ந்ததாக இருந்தால் அதன் பலனும் உயர்ந்ததாகவே இருக்கும். யாத்திரை செய்பவர், ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவராக இருந்தால், அவரது யாத்திரையின் பலன் அவருக்கு மட்டுமல்லாமல், அவர் சந்தித்த மற்ற எல்லோருக்கும் கிடைக்கும். இதையே நாரத பக்தி சூத்திரம், ‘தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி—தீர்த்தத் தலங்களின் மகிமை ஆன்மீகத்தில் உன்னத நிலையை அடைந்தவர்களால் மேலும் உயர்கிறது’ என்று கூறுகிறது. அதன் பின்னணியில் அன்னையின் தென்னக யாத்திரையை நாம் காண வேண்டும். அவர் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சக்தி ஆவார். ஆன்மீகச் சாதனைகள் மூலம் தான் அடைந்த ஆன்மீகச் சக்திகளை குருதேவர் ஷோடசி பூஜையில் அன்னையிடம் அர்ப்பணித்தார்.



