
Vivekanandarin Veera Mozhigal Volume - 2 (Tamil)
₹ 180.00
Out of stock
Tags:
இறைவனின் திருக்கரங்களில் தெய்வீகக் கருவியாக இருந்து மக்களின் தெய்வீக இயல்பை அவர்கள் மீண்டும் உணரச் செய்கின்ற பணியைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அறியாமையில் ஆழ்ந்திருந்த மனிதர்களைத் தனது ஆன்மீக சக்திமிக்க சொற்பொழிவுகள் மூலம் தட்டியெழுப்பினார். ‘உருவமற்ற குரலாக இருந்தபடி அனைவருக்கும் விழிப்பூட்டுவேன்’ என்று முழங்கியவர் அவர். அத்தகைய தெய்வீகத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் அடங்கிய தொகுப்பு நூல்களே இவை. இந்தப் பகுதியில்(பகுதி – 1) 1.வீரமொழிகளுக்கு முன்னுரை போன்று அமைந்துள்ள ‘எனது வாழ்வும் பணியும்’ என்ற சொற்பொழிவு. 2.சுவாமி விவேகானந்தரை உலக அரங்கில் அடையாளம் காட்டிய ‘சிகாகோ சொற்பொழிவுகள்’. 3.இந்து மத வரலாற்றினைச் சுருக்கமாக எடுத்துக்கூறும் ஒரு கடிதம். இது சுவாமிஜி தமிழ் மக்களுக்கு எழுதிய கடிதமாகும். 4.கர்மயோக சொற்பொழிவுகள். 5.பக்தியோக சொற்பொழிவுகள். 6.நாரத பக்தி சூத்திரங்களின் திரண்ட பொருள்.
Delivery
Product Details
Rajayogam, Arulurai



