
Vivekanandarin Veera Mozhigal Volume - 7 (Tamil)
₹ 90.00
Tags:
இறைவனின் திருக்கரங்களில் தெய்வீகக் கருவியாக இருந்து மக்களின் தெய்வீக இயல்பை அவர்கள் மீண்டும் உணரச் செய்கின்ற பணியைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அறியாமையில் ஆழ்ந்திருந்த மனிதர்களைத் தனது ஆன்மீக சக்திமிக்க சொற்பொழிவுகள் மூலம் தட்டியெழுப்பினார். ‘உருவமற்ற குரலாக இருந்தபடி அனைவருக்கும் விழிப்பூட்டுவேன்’ என்று முழங்கியவர் அவர். அத்தகைய தெய்வீகத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் அடங்கிய தொகுப்பு நூல்களே இவை. இந்தப் பகுதியில்(பகுதி – 7) 1.உலக மதங்களைப் பற்றி சுவாமிஜி ஆற்றிய சொற்பொழிவுகள், குறிப்புகள், கட்டுரை, பத்திரிகைக் குறிப்புகள் ஆகியவை. 2.இந்து மதம் மற்றும் பகவத்கீதை பற்றிய சுவாமிஜியின் சொற்பொழிவுகள். 3.புத்த மதம், அதன் அடிப்படைக் கருத்துக்கள், அதன் வளர்ச்சி, அதன் சீர்குலைவிற்கான காரணங்கள். 4.கிறிஸ்தவ மதம், ஏசுநாதரின் வாழ்க்கை. 5.முகமதிய மதம். 6.உலகின் அனைத்து மதங்களையும் ஒப்புநோக்கும் சுவாமிஜியின் ‘மத ஒப்புமை’ பற்றிய கருத்துக்கள். 7.பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையும் அவரது செய்தியும்.
Product Details
Ulaga Madhangal, Matha Ottrumai, Sri Ramakrishnar.